ஜென்னு குரும்பரின் திருமணம் மற்றும் வாழ்க்கை பற்றி

ஜென்னு குரும்பரின் திருமணம்,குடும்பம் மற்றும் தங்குமிட அமைப்பு

                                                                                                                                                Presented by Jeba Melwin

 

முகவுரை 

ஜெனு குறும்பா என்பவர்கள் தென்இந்திய பழங்குடியினரில் ஒருவராவர்.இந்திய அரசு  அவர்களை பழமையான பழங்குடியினரின் குழு என்று அடையாளம் கண்டு கொள்ளுகிறது.தமிழ்நாடு, கேரளா மற்றும் கர்நாடகா ஆகிய மூன்று மாநிலங்களில் வாழ்கின்றனர்.அவர்கள் முக்கியமாக நீலகிரி  மாவட்டம், , தமிழ்நாடு , கேரளா வயநாடு மாவட்டத்தில், மைசூர் மற்றும் கர்நாடகா கொடகு மாவட்டங்களில் மலைகள் மற்றும் காடுகளில் காணப்படுகின்றனர்.தமிழ்நாடு மற்றும் கேரளாவில் அவர்கள் 'காட்டு நாயக்கர்' என்று அடையாளம் கண்டு கொள்ளப்படுகிறார்கள்.'காட்டு' என்பது தமிழில் காடு என்று பொருள்படும்.' நாயக்கா' என்பது 'அரசன்' என்றும் இனத்தை குறிக்கவும் பயன்படுத்தப்படுகிறது.கர்நாடகாவில் அவர்கள் 'ஜெனுகுரும்பர்' என்று அடையாளம் கண்டு கொள்ளப்படுகிறார்கள்.'ஜெனு' என்பது கனனடத்தில் தேன் என்று பொருள்படும்.ஜெனு குறும்பர் தங்கள் பாரம்பரியத்தை மற்ற பழங்குடி மக்கள் (மற்றும் பிற _ துணைக்குழுக்கள் இருந்து), சமூக அமைப்பு, சுங்க மற்றும் பழக்கம் வழக்கங்களிலிருந்து  தக்க வைத்துவைத்தள்ளனர்.

ஜெனு குறும்பரின் திருமணம் மற்றும் வாழ்க்கை பற்றி

 

 

பூப்பெய்ததும்  ஒரு பெண் ‘கும்மானு’ என்று அழைக்கபடும் தற்காலிக குடிசையில் தங்க வைக்கப்படுகிறாள். இதிலிருக்கும் நாட்களில் ஏராளமான சடங்குகள் செய்யப்படுகிறது.ஏறக்குறைய 30 நாட்களுக்குப் பின்னர்,பூப்பெய்து விழா தினத்தன்று ,’கும்மானு’ நாசம் செய்யப்படுகிறது. அப்பெண் அருகில் உள்ள ஆறு, குளம் அல்லது கிணற்றில் இருந்து நீர் மொண்டு குளிப்பாட்டுகிறாள்.அதன் பின்னர், அப்பெண் ஒரு அரிவாளால் தேங்காயை உடைப்பாள். தேங்காய் இரு சமமான முரிகளாக உடைந்தால், நல்ல சகுனம் என்பது இவர்கள் நம்பிக்கை.முறிகள் அருகருகில் விழுந்தால்,அப்பெண்ணிற்கு வரன் அருகில் உள்ள இடத்திலிருந்து வருவான் என்றும், தூரத்தில் விழுந்தால் வரன் தூர இடத்திலிருந்து  வருவான் என்றும் இவர்கள் நம்புகின்றனர். ஒரு தேங்காய் முறி சிறியதாக இருந்தால் முதல் குழந்தை மரித்துவிடும் என்றும் இவர்கள் நம்புகின்றனர். ஜென்னு குறும்பா பெண்ணின் திருமண கனவுகள் இங்கே தொடங்குகின்றது .

ஜென்னு குரும்ப சமுதாயத்தில் பெற்றோரால் ஒழுங்கு செய்யப்படும் திருமணங்களும்,காதல் திருமணங்களும் சகஜமே. பொதுவாக காதலில் விழுபவர்கள் ஓடி விடுவர். முன்நாட்களில் ஒழுங்கு செய்யப்படும் திருமணங்கள் வெற்றிலை பாக்கு மாற்றிக் கொள்வதோடு முடிந்து விடும்.இப்போது முன்பை விட சற்றே விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. திருமணத்திற்கான வரன் பார்க்கும் / பெண் பார்க்கும் படலத்தை இருதரப்பினரும் முதலில் தொடங்கக்கூடும்.

திருமணம் செய்யப் போகும் ஆணும் பெண்ணும் ஒரே சமுதாயத்தை சேர்ந்தவர்களாகவும் இருக்க வேண்டும்.”முதஸ குரும்ம்பர்” “அரே நாடு குரும்பர்” மற்றும் “கூடுமனே குரும்பர்” என்பன ஜென்னு குரும்பர்களின் முன்று கோத்திரங்கள் ஆகும். முன்று கோத்திரங்களும் சமமாக எண்ணப்படுகின்றன. ஆதி நாட்களில் மற்ற கோத்திரதினரை திருமணம் செய்தலும்,மற்ற சமுதாயத்தினரை திருமணம் செய்தலும் கடுமையாக தடைசெய்யப்பட்டு இருந்தன.அவ்விதம் நடந்தால் ஊரை விட்டு ஒதுக்கி வைக்கப்படுவர்.இப்பொழுது இது சற்று தளர்த்தப்பட்டுள்ளது.

திருமணம் செய்யப்போகும் ஆணும்,பெண்ணும் ஒருவரை ஒருவர் விரும்பினால் மட்டும் திருமணம் ஒழுங்கு செய்யப்படும்.அருகருகே உள்ள கிராமத்தை சேர்ந்தவர்களாக இருப்பின் பெற்றோரும்,பெரியவர்களும் அங்கேயே ஒருவரையொருவர் சந்தித்து, திருமணத்தை ஒழுங்கு செய்கின்றனர். தூரமாக இருப்பின் பெற்றோர்களும்,பெரியவர்களும் மற்ற தரப்பினருடைய கிராமத்திற்கு சென்று திருமணத்தை நிச்சயம் செய்கின்றனர். திருமண நிச்சயத்திற்கு சிறப்பு வைபவம் எதுவும் கிடையாது. முன்நாட்களில் ஜென்னு குரும்பரிடையே வரதட்சணைப் பழக்கம் இல்லாதிருந்தது.இப்பொழுது பெண்ணிடம் இருந்து ஆண் வரதட்சணை பெறும் பழக்கம் நடைமுறையில் உள்ளது. வரதட்சனை அவருடைய திறனுக்கு ஏற்ப அளிக்கப்படுகிறது.

திருமணம் எங்கே நடத்தப்பட வேண்டுமென்ற சிறப்பு சட்டம் எதுவும் கிடையாது.அது இரு தரப்பினருடைய வசதியைப் பொருத்தாக இருக்கிறது. திருமணச் செலவு இரு தரப்பினராலும் சந்திக்கப்படுகிறது. திருமணத்திற்கான அழைப்பு இரு தரப்பினருடைய உறவினருக்கும் கொடுக்கப்பட கூடும். ஆனால் ஊர் தலைவர் கண்டிப்பாக அழைக்கப்படவேண்டும்.

பூசாரியாக செயல்ப்படும் ஊர்த் தலைவர் தான் பொதுவாக திருமண சடங்குகளை செய்வார் ‘பாங்கரா’ என்னப்படும் சிறிய வெள்ளை மற்றும் மற்ற நிற மணிகளை கொண்டு செய்யப்பட்ட கழுத்தணியே மணமக்களின் அவளது தாய் மாமனின் மனைவி அணிவிப்பாள் அரசாங்க திட்டத்தின் படி பொதுவாக திருமணங்கள் பதிவு செய்யபடுவதில்லை. ஆதி நாட்களில் திருமண விருந்து எதுவும் கொடுக்கப்படவில்லை.வெற்றிலை பாக்கு மட்டுமே கொடுக்கப்பட்டது. தற்போது திருமண விருந்து ,பொதுவாக சைவ உணவு கொடுக்கப்படுகிறது

மேலும் ஜென்னு குரும்பரின் திருமண விடியோ காண இங்கே  கிளிக் செய்யவும்