JK பொருளாதார அமைப்பு


ஜென்னு குரும்பரின்  பொருளாதார அமைப்பு, உற்பத்தி மற்றும் பகிர்மானம் 

                                         Presented by Melwin Kingsley

முகவுரை 


ஜென்னு குரும்பா என்பவர்கள் தென்இந்திய பழங்குடியினரில் ஒருவராவர்.இந்திய அரசு அவர்களை பழமையான பழங்குடியினரின் குழு என்று அடையாளம் கண்டு கொள்ளுகிறது. தமிழ்நாடு,கேரளா மற்றும் கர்நாடகா ஆகிய மூன்று மாநிலங்களில் வாழ்கின்றனர். அவர்கள் முக்கியமாக நீலகிரி மாவட்டம், தமிழ்நாடு , கேரளா, வயநாடு மாவட்டத்தில், மைசூர் மற்றும் கர்நாடகா கொடகு மாவட்டங்களில் மலைகள் மற்றும் காடுகளில் காணப்படுகின்றனர். பொதுவாக, ஜென்னு குரும்பர் வாழ்விடத்தை முதுமலை மற்றும் வயநாடு,பந்திபூர் மற்றும் காட்டு வாழ்க்கை சரணாலயங்களின் அருகில் அமைத்துள்ளனர்.
ஜென்னு குரும்பா என்பது மூன்று மாநிலங்களில் அறியப்பட்ட பிரபலமான வார்த்தை என்பதால், நாங்கள் அவர்கள் சமூகம் மற்றும் மொழியை 'ஜென்னுகுரும்பா' என்று அழைக்கிறோம்.

ஆதிநாட்களில் எல்லா ஜென்னு குரும்பர்களும் காட்டினுள்ளே வாழ்ந்தனர், எனினும் இவர்களின் பொருளாதார நிலைய மேம்படுத்தும் படியாகவும் வெளி உலகுடன் இவர்களுக்கு தொடர்பு ஏற்படுத்தும் படியாகவும் கர்நாடக அரசாங்கம் இவர்களுக்கென காடுகளின் புறநகர் பகுதிகளில் கட்டியுள்ள குடியிருப்புகளில் இவர்களை தங்க வைக்க முயற்றி எடுத்து இருக்கிறது.


JK's பொருளாதார அமைப்பு:

ஆதியில் ஜென்னு குரும்பர்கள் வேட்டையாடி சேகரிப்பவர்களாக இருந்தனர். இவர்களின் முக்கியமான தொழில் தேன் எடுப்பதாக இருந்தது. காட்டுத்தேன் எடுப்பதில் இவர்கள் கை தேர்ந்தவர்கள். இவர்கள் துடே,துப்பா,ஜேனு,சேரி ஜேனு... முதலிய பல வகையான தேன் எடுக்கின்றனர். இவை தவிர காட்டில் விளையும் பல விதமான கிழங்குகள், முலிகை செடிகள் இலைகள், மரப்பாசி, முதலியவற்றை சேகரிகின்றனர்.ஜென்னு குரும்பர்கள் வேட்டையிலும் ஈடுபடுகின்றனர். “உடு,கூராணு,ஹரானு,சாரேகனு,கடவே,பெக்கு,புனுறு, காட்டாடு,கிரானு, காடு கோழி, மாடே சொகுத்தா, ஹக்கி, உனுகு ஹக்கி, குற்றே ஹக்கி, குகிலு ஹக்கி, கொட்டலே ஹக்கி, சிட்டு ஹக்கி,” முதலியன இவர்களால் வேட்டையாடப்படும் சில விலங்குகள் மற்றும் பறவைகள் ஆகும். மக்கள் ஜா என்பவர் “நுகர்வு தன்மையே பொறுத்தவரை, ஆதிவாசிகளின் பொருளாதாரம், ஜனநாயக அமைப்பின் இயல்பை குடும்ப அளவில் வெளிப்படுத்துகிறது  என்று கூறியுள்ளார்.[j]. ஜென்னு குரும்பரை பொருத்தவரை இது உண்மையே. இந்த தேன்,கிழங்குகள் மற்றும் இறைச்சி குடும்பத்தின் அங்கத்தினரிடைய சமமாக பங்கிடப்படுகிறது.

காட்டிற்குள்ளே வாழ்பவர்கள் தங்களுக்குச் சொந்தமான சிறிய நிலத்தைப் பயன்படுத்தி பயிர் செய்கின்றனர். காடுகளின் புறநகர் பகுதிகளில் வாழும் மற்ற ஜென்னு குரும்பர்கள் அருகில் இருக்கும் நிலச் சொந்த்காரரிடம் தினக் கூலியாக வேலை செய்கின்றனர் தேயிலை, காப்பி,மிளகு, பாக்கு முதலியன இவர்கள் ஈடுபடும் முக்கிய வேளாண்மை ஆகும். இந்த நான்கை தவிர அரிசி,பருத்தி,ராகி,கொள்ளு, பின்ஸ், மிளக்காய்,இஞ்சி, பருப்பு, சோளம் முதலியவற்றை வேளாண்மை செய்வதிலும் இவர்கள் ஈடுப்பட்டுள்ளனர். தேயிலையும், காப்பியும் மூன்று மாநிலங்களில் மலைப்பாங்கான இடங்களில் மட்டும் வளர்கின்றன.

ஜென்னு குரும்பர்கள் தாங்கள் சேகரிக்கும் எல்லா பொருட்களையும் மற்ற சமுதாயத்தை மக்களிடம் குறிப்பாக கெளடா, சொளிகா, மற்றும் செட்டி சமுதாய மக்களிடம் விற்கின்றனர்.பெரிய ஊர்களில் உள்ள சந்தையில் விற்கின்றனர். சில நேரங்களில் இவற்சை, அரசாங்க சங்கத்திடமும் விற்பதுண்டு.இன்னும் சில நேரங்களில், விலங்குகள்,பறவைகள் முதலியவற்சை இவர்கள் கருப்பு சந்தையிலும் விற்கின்றனர்.

 

வேட்டையாதுவதும் சேகரிப்பதும் மட்டுமன்றி ஜென்னு குரும்பர்கள் காட்டு இலாகவினரால் யானை பாகராகவும், கண்பாணிப்பாளராகவும் பணியமர்த்தப்படுகின்றனர்.கோடைகாலத்தில் காட்டுத் தீ பரவுவது சகஜம். காட்டுத் தீயிலிருந்து காட்டைக் காக்கும்படியாக அரசாங்கம் இவர்களை தற்காலிகமாக கண்காணிப்பு பணியில் அமர்த்துகிறது.

மேலும் பொருளாதார அமைப்பை பற்றி விளக்கப் படத்தின் முலம் தெரிந்துக்கொள்ள இங்கே கிளிக் செய்யவும்