அடர்ந்த காடுகள், ஆர்பரிக்கும் அருவிகள், விண்ணைத் தொடும் சிகரங்களை முத்தமிடும் வெண்மேகங்கள்,மனித வாசனை அறியா வழியிலே இறைவன் படைத்த உயிர் ஓவியங்களோடு உலா வரும் ஜென்னு குரும்பரின் மறைவான உலகம் இதுவே. இதோ இந்த இணையதளம் உங்களை இவர்களின் கொஞ்சும் மொழி பற்றி அறியவும், பரந்த பண்பாட்டையும் உயரிய கலாச்சாரத்தையும் அறியவும் அழைத்து செல்கிறது, செவி வழிப் பாடல்கள், கதைகள் நிறைந்த ஜென்னு குரும்பரின் உலகிலே, எழுத்து இலக்கியம் என்பது எட்டெடுத்து நடை பயிலும் சின்னஞ்சிறு குழந்தை. தமிழ் நாட்டில் மலைகளின் அரசி வாழும் நீலகிரி மாவட்டத்திலும், கேரளாவில் வயநாடு மாவட்டத்திலும், கர்நாடகாவில் மைசூர் மற்றும் கொடகு மாவட்டங்களிலும் வாழும் ஜென்னு குரும்பர் பற்றி அறிய இந்த இணையத்தளம் உங்களை வரவேற்கிறது. மேலும்இந்த வலைத்தளத்தை பயன்படுத்தி ஜென்னு குரும்பா பற்றி மேலும் அறிய உதவும் பயனுள்ள ஆதாரங்கள் உள்ள இணைப்புகளை பயன்படுத்திக் கொள்ளலாம்.
Copyright © 2023, Jenn Kurumba