ஜென்னு குரும்பரின் பொருளாதார அமைப்பு, உற்பத்தி மற்றும் பகிர்மானம்
Presented by Melwin Kingsley
முகவுரை
ஜென்னு குரும்பா என்பவர்கள் தென்இந்திய பழங்குடியினரில் ஒருவராவர்.இந்திய அரசு அவர்களை பழமையான பழங்குடியினரின் குழு என்று அடையாளம் கண்டு கொள்ளுகிறது. தமிழ்நாடு,கேரளா மற்றும் கர்நாடகா ஆகிய மூன்று மாநிலங்களில் வாழ்கின்றனர். அவர்கள் முக்கியமாக நீலகிரி மாவட்டம், தமிழ்நாடு , கேரளா, வயநாடு மாவட்டத்தில், மைசூர் மற்றும் கர்நாடகா கொடகு மாவட்டங்களில் மலைகள் மற்றும் காடுகளில் காணப்படுகின்றனர். பொதுவாக, ஜென்னு குரும்பர் வாழ்விடத்தை முதுமலை மற்றும் வயநாடு,பந்திபூர் மற்றும் காட்டு வாழ்க்கை சரணாலயங்களின் அருகில் அமைத்துள்ளனர்.
ஜென்னு குரும்பா என்பது மூன்று மாநிலங்களில் அறியப்பட்ட பிரபலமான வார்த்தை என்பதால், நாங்கள் அவர்கள் சமூகம் மற்றும் மொழியை 'ஜென்னுகுரும்பா' என்று அழைக்கிறோம்.
ஆதிநாட்களில் எல்லா ஜென்னு குரும்பர்களும் காட்டினுள்ளே வாழ்ந்தனர், எனினும் இவர்களின் பொருளாதார நிலைய மேம்படுத்தும் படியாகவும் வெளி உலகுடன் இவர்களுக்கு தொடர்பு ஏற்படுத்தும் படியாகவும் கர்நாடக அரசாங்கம் இவர்களுக்கென காடுகளின் புறநகர் பகுதிகளில் கட்டியுள்ள குடியிருப்புகளில் இவர்களை தங்க வைக்க முயற்றி எடுத்து இருக்கிறது.
JK's பொருளாதார அமைப்பு: