ஜெனு குறும்பா என்பவர்கள் தென்இந்திய பழங்குடியினரில் ஒருவராவர்.இந்திய அரசு அவர்களை பழமையான பழங்குடியினரின் குழு என்று அடையாளம் கண்டு கொள்ளுகிறது.தமிழ்நாடு, கேரளா மற்றும் கர்நாடகா ஆகிய மூன்று மாநிலங்களில் வாழ்கின்றனர்.அவர்கள் முக்கியமாக நீலகிரி மாவட்டம், , தமிழ்நாடு , கேரளா வயநாடு மாவட்டத்தில், மைசூர் மற்றும் கர்நாடகா கொடகு மாவட்டங்களில் மலைகள் மற்றும் காடுகளில் காணப்படுகின்றனர். பொதுவாக, ஜெனுகுரும்பர் வாழ்விடத்தை முதுமலை மற்றும் வயநாடு ,பந்திபூர் மற்றும் காட்டு வாழ்க்கை சரணாலயங்களின் அருகில் அமைத்துள்ளனர்.
தமிழ்நாடு மற்றும் கேரளாவில் அவர்கள் 'காட்டு நாயக்கர்' என்று அடையாளம் கண்டு கொள்ளப்படுகிறார்கள்.'காட்டு' என்பது தமிழில் காடு என்று பொருள்படும்.' நாயக்கா' என்பது 'அரசன்' என்று பொருள்படும். கர்நாடகாவில் அவர்கள் 'ஜெனுகுரும்பர்' என்று அடையாளம் கண்டு கொள்ளப்படுகிறார்கள்.'ஜெனு' என்பது கனனடத்தில் தேன் என்று பொருள்படும். 'குறும்பர்' என்பது மேய்ப்பர்கள் என்று அழைக்கப்படுவார்கள்.பாரம்பரியமாக, ஜெனு குறும்பர் காட்டு தேன் எடுப்பதை முக்கிய தொழிலாக கொண்டுயிருந்தனர்.எனினும், அவர்கள் செம்மறி ஆடுகளை மேய்தார்கள் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை.
தற்போது, ஜெனு குறும்பரின் முக்கிய பொருளாதார செயல்பாடு விவசாய தொழிலாளக உள்ளது.ஜெனு குறும்பா என்பது மூன்று மாநிலங்களில் அறியப்பட்ட பிரபலமான வார்த்தை என்பதால், நாங்கள் அவர்கள் சமூகம் மற்றும் மொழியை 'ஜெனுகுரும்பா' என்று அழைக்கிறோம்.ஏனெனில் வெவ்வேறு ஆண்டுகளில் கணக்கெடுப்பின் படி வெவ்வேறு பெயர்கள் மற்றும் _ துணைக்குழுக்கள் தொடர்புடைய மாற்று பெயர்களில் இவர்கள் இருப்பதால் துல்லியமான மக்கள் தொகை எண்ணிக்கை வருவதற்கு கடினமாக உள்ளது. எனினும், மக்கள் தொகை 50,000 அல்லது இன்னும் அதிகமாக இருக்கலாம் என்று கணிக்கபடுகிறது.
ஜெனுகுறும்பா என்பது தென் திராவிட மொழி குடும்பத்தின் ஒரு உறுப்பினர். அது பொதுவாக மிகவும் நெருக்கமாக தமிழ் அல்லது மலையாளத்தை விட கன்னடதில் தொடர்பு கொண்டுள்ளது.
எழுத்தறிவு விகிதம் சரியாக தெரியவில்லை ஆனால் மிகவும் குறைவு. பள்ளி குழந்தைகள் தொடர்ந்து பள்ளிக்கு செல்லவது காணமுடியாத நிலையில் உள்ளது.